போச்சம்பள்ளி, ஆக.1: போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன்(80). இவரது மனைவி முருகம்மாள்(70). இவர்கள் 20 செம்மறியாடுகளும், 2 கறவை மாடுகளும் வளர்த்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை பட்டியில் கட்டி விட்டு, இருவரும் தூங்க சென்றனர். நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு, கொட்டகைக்கு சென்று பார்த்த போது, மர்ம விலங்கு கடித்ததில், 3 ஆடுகள் உடல் சிதைந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் 5 ஆடுகள் படுகாயத்துடன் கிடந்தது.
இது குறித்து முருகம்மாள் கூறுகையில், ‘மர்ம விலங்கு கடித்ததில், 3 ஆடுகள் பலியாகியுள்ளது. இதற்கு முன் 2 ஆடுகளை, மர்ம விலங்குகள் கடித்து கொன்றது. கூலி வேலை செய்ய முடியாமல், நாங்கள் கடன்பட்டு ஆடுகளை வாங்கி வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால், மர்ம விலங்குகள் அடிக்கடி வந்து ஆடுகளை கொன்று விட்டு செல்வதால், எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
The post மர்ம விலங்கு கடித்து குதறியதில் 3 ஆடுகள் பலி appeared first on Dinakaran.