×

குடி மகன்களின் ‘‘பாராக’’ மாறும் பயணிகள் நிழற்குடை: பொதுமக்கள், மாணவர்கள் அவதி

ஊட்டி, ஆக. 1: நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய நான்கு தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம புறங்களில் நிழற் குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற் குடைகளில் ஒரு சில நிழற்குடைகளை மட்டும் அந்தந்த கிராம பகுதியில் உள்ள பொதுமக்கள் முறையாக பராமரித்து வருகின்றனர். பெரும்பாலான நிழற்குடைகளை பஞ்சாயித்து நிர்வாகங்கள் பராமரிப்பதில்லை என தெரிகிறது. இதனால், இவைகளில் பெரும்பாலான நிழற்குடைகள் தற்போது திறந்த வெளி பார்களாகவும், நாடோடிகளின் கூடாரங்களாகவும் மாறிவிட்டன. இதனால், அந்த நிழற்குடைகளை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊட்டி அருகேயுள்ள கீழ் கைகாட்டி, தேவர்சோலை அருகேயுள்ள தேவப்பெட்டா நிழற்குடைகள் தற்போது திறந்தவெளி பார்களாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், இங்கு பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிழற்குடைகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிழற்குடைகளையும் ஆய்வு செய்து முறையாக சீரமைத்து பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குடி மகன்களின் ‘‘பாராக’’ மாறும் பயணிகள் நிழற்குடை: பொதுமக்கள், மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Coonoor ,Kudalur ,Kunta ,Bandalur ,Nilgiris ,
× RELATED குன்னூரில் பெரியார் பிறந்த நாள் விழா