×

திருமாவளவனுக்கு கோர்ட் பிடிவாரன்ட்


மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் கடந்த 2003 மார்ச் 13ம்தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் திருமாவளவன் தலைமையில் மதமாற்ற தடைசட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. திருமாவளவன் ஆஜராகவில்லை.

இதனையடுத்து நீதிபதி விஜயகுமாரி, வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வரும் 27ம்தேதிக்கு ஒத்தி வைத்தார். குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து விசிக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால் நீதிமன்றத்தில் மனு எதுவும் தாக்கல் செய்ய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருமாவளவனுக்கு கோர்ட் பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Mayiladudhara ,President ,Thirumavalavan ,Liberation Leopards Party ,Mayiladudhara Railway ,Mayiladudur ,Thirumaalavan ,
× RELATED திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்...