×

100 நாள் வேலையில் முழு ஊதியம் வழங்க கோரி மனு அளிக்கும் போராட்டம் தெள்ளார் பிடிஓ அலுவலகம் முன்

வந்தவாசி, ஆக.1: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் படி ₹319 சம்பளம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு இயக்கத்தில் வட்டார செயலாளர் அப்துல்காதர் தலைமை தாங்கினார். கரும்பு விவசாய சங்க மாநில நிர்வாகி அரிதாசு கண்டன உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் கா.யாசர் அரபாத், இடைக்குழு உறுப்பினர் சுகுமார், கிளை செயலாளர் தீபநாதன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி திலகராஜ், அயத் பாஷா, பரசுராமன், நித்திஷ் உள்ளிட்ட பரும் கலந்துகொண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி’யிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இனிவரும் காலங்களில் முழு சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தனார்.

The post 100 நாள் வேலையில் முழு ஊதியம் வழங்க கோரி மனு அளிக்கும் போராட்டம் தெள்ளார் பிடிஓ அலுவலகம் முன் appeared first on Dinakaran.

Tags : Telar PTO ,Vandavasi ,Marxist Communist Party ,Tellar District Development Office ,District Secretary ,Abdulkader ,Tellar PTO ,Dinakaran ,
× RELATED சுவாச பிரச்சனை காரணமாக மார்க்சிஸ்ட்...