தென்காசி, ஆக.1: தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு 7790019008 என்ற வாட்ஸ் அப் எண் 10.6.2024 முதல் செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் குறைகளை மேற்கண்ட எண்ணிற்கு புகாராக தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தென்காசி மாவட்ட பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.