×

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய பெண் கைது

சிவகாசி, ஆக.1: சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு பதுக்கிய பெண்ணை போ லீசார் கைது செய்தனர். சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யாநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் மற்றும் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள மாரியம்மாள் (48) என்பவரின் வீட்டில் உரிய அனுமதியின்றி முழுமையாக தயாரிக்கப்படாத பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாரியம்மாளை கைது செய்தனர்.

The post வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Bo Leesar ,Sub-Inspector ,Surendra Kumar ,Tirutangal Satyanagar ,Mariammal ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை