×

எடப்பாடி வலியுறுத்தல்: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணத்தை உயர்த்த கூடாது


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதியை இணைய வழி மூலம் உரிய கட்டணம் செலுத்திவிட்டு சுலபமாக வீடு கட்டும் அனுமதியைப் பெறலாம் என்று நாக்கில் தேன் தடவிவிட்டு, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி தமிழக மக்களின் ‘சொந்த வீடு’ என்ற எண்ணத்தை கனவாகவே நீர்த்துப்போகச் செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு கண்டனங்களை தெரிவிக்கிறேன்.

சென்னை மாநகராட்சியில் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணம் 1000 சதுர அடிக்கு சுமார் ரூ 46,000-லிருந்து ரூ 1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணங்களும் தரத்திற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

The post எடப்பாடி வலியுறுத்தல்: வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதி கட்டணத்தை உயர்த்த கூடாது appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,
× RELATED காவிரியில் இருந்து தண்ணீர் எடுக்க...