×

இந்தியில் பெயரிடப்பட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு

புதுடெல்லி: இந்தியாவின் ஒட்டுமொத்த விமான போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி அமைப்பதற்காக 90 ஆண்டுகால விமான சட்டத்திற்கு பதிலாக புதிய மசோதாவை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு பாரதிய வாயுயான் விதேயக் என இந்தி மொழியில் பெயரிடப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராம் மோகன் நாயுடு, ‘ மசோதாக்களுக்கு இந்தியில் பெயரிட்ட விவகாரத்தில் நாங்கள் அரசியலமைப்பின் எந்த பகுதியையும் மீறவில்லை’’ என்றார்.

The post இந்தியில் பெயரிடப்பட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Aviation Minister ,Ram Mohan Naidu ,Lok Sabha ,India ,Bharatiya ,
× RELATED காவலில் இருக்கும் குற்றவாளிகள்...