×

இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

சென்னை: இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினராக பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வு கூட்டம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய கூடத்தில் தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் (Gig and platform workers), தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் (18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள்) www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டது.

பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம் போன்ற நலத்திட்ட உதவிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1,200 வழங்கப்படுகிறது. எனவே இணையதள தொழிலாளர்கள் இவ்வாரியத்தில் இலவசமாக பதிவு செய்து பலன்களை பெறலாம் என தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.

The post இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Online Workers Welfare Board ,CHENNAI ,Internet Workers Welfare Board ,Chennai Thenampet TMS ,Labor ,Welfare ,Board ,Atul Anand ,Internet ,Workers Welfare Board ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!