×

நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார். ஒரு சில இடங்களில் அதிக அளவு மழைப்பொழிவு, நீரோடைகளில் நீர் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேறு மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : NEILGIRI DISTRICT ,Nilgiri ,Ruler ,Lakshmi Bhya ,Neelgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்