×

சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் விபத்தில் இறந்த தனியார் பள்ளி ஆசிரியையின் கணவரும் சாவு

 

வீரவநல்லூர், ஜூலை 31: சேரன்மகாதேவியை அடுத்த வேலியார்குளம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் ஜான் கிறிஸ்டோபர்(52). இவரது மனைவி அன்புசெல்வி(50), இவர் சேரன்மகாதேவியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் கடந்த 18ம்தேதி சேரன்மகாதேவி – களக்காடு ரோட்டில் பைக்கில் சென்றனர்.

அப்போது எதிரே வந்த மினிலாரி மோதியதில் அன்புசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ஜான் கிறிஸ்டோபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ஜான் கிறிஸ்டோபர் பலியானார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் விபத்தில் இறந்த தனியார் பள்ளி ஆசிரியையின் கணவரும் சாவு appeared first on Dinakaran.

Tags : Cheranmahadevi-Kalakkadu road ,Veeravanallur ,Rathnaswamy ,John Christopher ,Velyarkulam Main Road ,Cheranmahadevi ,Anbuselvi ,
× RELATED வீரவநல்லூரில் திக சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு மாநாடு