×

கிணற்றை ஆழப்படுத்தியபோது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி

விழுப்புரம்: கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது, இரும்பு ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலியாகினர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர், அருங்குருக்கை கிராமத்தில் கண்ணன் (62) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியை திருக்கோவிலூர் அருகே பெருங்குருக்கையை சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் ஹரிகிருஷ்ணன் (40), நெய்வணை முருகன் (38) ஆகியோர் மேற்கொண்டு வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கிணறு ஆழப்படுத்தும் பணி நடந்தது. பின்னர் கிரேனில் இணைக்கப்பட்ட மண் அள்ளும் பக்கெட் மீது உட்கார்ந்து மூவரும் கிணற்றுக்கு மேலே வந்துள்ளனர். திடீரென இரும்பு ரோப் அறுந்து 100 அடி ஆழ கிணற்றில் மூவரும் விழுந்து பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் 3 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றபோது, உயிரிழப்புக்கு காரணமான கிரேன் டிரைவர், நிலஉரிமையாளர் மற்றும் பணிக்கு அழைத்துவந்தவரை கைது செய்ய வேண்டும் என கூறி உறவினர்கள் தடுத்தனர். மேலும் ரோப் அறுந்து விழுந்ததில் இறக்கவில்லை, கிணற்றை ஆழப்படுத்த சட்டத்திற்கு புறம்பாக ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி உள்ளனர். அதில் வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

 

The post கிணற்றை ஆழப்படுத்தியபோது ரோப் அறுந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Kannan ,Tiruvenneynallur, Villupuram district ,
× RELATED விழுப்புரம் கோட்டம் சார்பில் 740 சிறப்பு பேருந்துகள் இயக்கம்