- வயநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கட்சி
- சென்னை
- வயநாடு நிலச்சரிவு
- காங்கிரஸ்
- செல்வாப்பேருந்தகை
- தின மலர்
சென்னை: வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகுந்த வேதனை, துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
* காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் வழங்க வேண்டும்.
* பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): வயநாட்டில் நெருங்க முடியாத அளவுக்கு இயற்கைச் சீற்றம் இருந்த போதும், பலநூறு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு, வழக்கம்போல அரசியல் பாகுபாடு காட்டாமல், இக்கட்டான நேரத்தில் உயிர்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் மாநில அரசுக்கு உரிய உதவிகளைச் செய்ய வேண்டும்.
* பாஜக தலைவர் அண்ணாமலை: வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ, தமிழக பாஜ பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தலைமையில், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், நீலகிரி மாவட்டப் பார்வையாளர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
* மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ,கோவை மற்றும் இன்ன பிற மாவட்டங்களில் கல்குவாரிகள் எண்ணிலடங்கா வகையில் உருவாக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன. கேரளாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தமிழ்நாட்டிற்கும் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் இயற்கை சுரண்டலை தடுத்து நிறுத்த முனைப்புக் காட்ட வேண்டும்.
* தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: வயநாடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க தொடர் நடவடிக்கை தேவை.
* அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்: வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
* முஜிபுர் ரஹ்மான் (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர்): வயநாடு பேரிடரிலிருந்து மக்களும், கேரள உறவுகளும் விரைந்து நிவாரணம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இந்தநேரத்தில் வழக்கம்போல் அரசியல் செய்யாமல் கேரள மக்களுடனும், கேரள அரசோடும் ஒன்றிய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும்.
The post வயநாடு நிலச்சரிவு சம்பவம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.