- தம்பரம்,
- சென்னை
- டிஜிபி
- சங்கர் ஜீவால்
- தம்பரம், சென்னை
- டி. கோடிசெல்வம்
- நகர் போக்குவரத்து அமலாக்குதல்
- அடையாள போக்குவரத்து அமலாக்க
- தம்பரம் நகராட்சி காவல் துறை
- Thambaram
- தாம்பரம்
- தின மலர்
சென்னை: சென்னை, தாம்பரம் உள்பட 4 உதவி கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை, தி.நகர் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த கோடிசெல்வம், அடையாறு போக்குவரத்து அமலாக்கப் பிரிவுக்கும், தாம்பரம் மாநகர காவல் துறை ஆயுதப்படையில் உதவி கமிஷனராக இருந்த ராஜா தி.நகர் போக்குவரத்து அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராகவும், தாம்பரம் மாநகர உதவி கமிஷனராக இருந்த ரவி அண்ணாநகர் போக்குவரத்து உதவி கமிஷனராகவும், அடையாறு போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த திருவேங்கடம் தாம்பரம் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.
The post சென்னை, தாம்பரம் உள்பட 4 உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.