திருவெறும்பூர், ஜூலை 31: திருவெறும்பூர் அருகே டூவீலரில் குட்கா கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியில் நவல்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழமாதேவியை சேர்ந்த அசரப்பள்ளி (50) என்பவர் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தை சோதனையிட்டபோது, குட்கா உள்ளிட்ட பொருட்கள் சுமார் 24 கிலோ இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவற்றை நவல்பட்டு போலீசார் பறிமுதல் செய்ததோடு அசரப் அலியையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
The post திருவெறும்பூர் அருகே டூவீலரில் குட்கா கடத்தியவர் கைது appeared first on Dinakaran.