×

உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்

ஆண்டிபட்டி, ஜூலை 31: உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள் குறித்து வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மண் ஆய்வை பொறுத்து உரமிடுத்தலுக்கான அட்டவணை இருக்க வேண்டும். கார மண்ணிற்கு அமில உரங்களும், அமில மண்ணிற்கு கார உரங்களை அளிப்பது போன்ற மண் எதிர் விளைவுகளை பொறுத்து உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். உரங்களை மேலோட்டமாக தெளிக்கக் கூடாது. உரங்களை 3 முதல் 4 சென்டிமீட்டர் அளவிற்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இட வேண்டும். இதனால் களை வளர்ச்சியை தடுக்கலாம். மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். உரக்கலவை அட்டவணைப்படி உரங்களை கலக்கி முடிந்த அளவிற்கு அதே உரக்கலவையை இட வேண்டும்.

கடின மண் வகையில் தழைச்சத்து, உரத்தில் பாதி அளவு அடி உரமாக இட வேண்டும். உரமிட்ட 1 வாரத்திற்குள் அதிகமாக நீர் பாய்ச்சுவதோ அல்லது நீர் தேங்கி இருப்பதோ கூடாது. நீரை வடித்த பிறகு மற்றும் களை எடுத்த பின் மேல் உரமிட வேண்டும். அமில மண்களை சுண்ணாம்பு பொருட்களுடன் தேவைகேற்ப நேர்த்தி செய்ய வேண்டும். வறண்ட நிலங்களில் தழைச்சத்தை இலைவழியாக தெளிப்பதோ அல்லது ஆழமாக இடும்போதோ மேல் உரமாக இட வேண்டும். அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடவேண்டும். மண் உருண்டைகளில் யூரியாக உள்ள உரங்களை பயிர்களுக்கு இட வேண்டும். இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் வரப்பில் பயறு பயிரிடலாம்