×

பழங்குடியின மக்களுக்கு வீடுகட்ட பூமி பூஜை

தேன்கனிக்கோட்டை, ஜூலை 31: தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சியில், 48 பழங்குடியின மக்களுக்கு பிரதமரின் ஜன்மன் திட்டத்தில், வீடுகட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தளி எம்எல்ஏ ராமசந்திரன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா மாரப்பன், ஊராட்சி தலைவர் முனிராஜ், துணைத்தலைவர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியின மக்களுக்கு வீடுகட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Puja ,Dhenkanikottai ,Pettamukilalam panchayat ,Tali ,MLA Ramachandran ,Bhumi Pooja ,
× RELATED புதிய சாலைப்பணிக்கான பூமி பூஜைக்கு...