×

தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய எழுதி கிழித்துபோட்ட மேலும் ஒரு கடிதம் சிக்கியது: போலீஸ் விசாரணை சூடுபிடித்தது

சென்னை: மாங்காடு, சக்திநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களது இரண்டாவது மகள் நந்தினி. பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் மாணவியின் அறையை சோதனை செய்தபோது, அங்கு நந்தினி கைப்பட எழுதிய இரண்டு கடிதங்கள் சிக்கியது. அதில் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டதாகவும் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த உலகத்தில் உறவினர்கள், ஆசிரியர்கள் என்று யாரையும் நம்பக்கூடாது. பாலியல் வன்கொடுமைக்கு பலியாகும் கடைசி பெண் நானாக  இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். என்று எழுதி வைக்கப்பட்டிருந்ததது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனிடையே மாணவியின் பிரேதபரிசோதனை முடிந்து உடல் நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நந்தினியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறியழுதனர். மாணவியின் செல்போனை ஆய்வு செய்து யார் யாரிடம் பேசினார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் பிடிபடுவார் என்றும் மாணவி எழுதி கிழித்து போட்டிருப்பதாக மேலும் ஒரு கடிதம் கிடைத்ததாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.   …

The post தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதிய எழுதி கிழித்துபோட்ட மேலும் ஒரு கடிதம் சிக்கியது: போலீஸ் விசாரணை சூடுபிடித்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Panneerselvam ,Mangadu, Sakthinagar ,Indian Bank ,Geeta ,
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்