×

உணவு பாதுகாப்பு பயிற்சி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காரணை கிராமத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளாகத்தில், தேசிய வேளாண்மை நிறுவனம் சார்பில் உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு ஒருநாள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தேசிய வேளாண்மை நிறுவன முதன்மை தொழில்நுட்ப மேலாளர் ஷைலாரவி தலைமை தாங்கி, உணவு பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் பாதுகாப்பாக வைப்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கி, உணவு பாதுகாப்பின்போது ஏற்படும் இடர்பாடுகளை எவ்வாறு கலைவது குறித்து எடுத்துரைத்தார். மேலும், சுற்றுப்புற தூய்மை சுகாதாரம் பேணி காத்தல் குறித்து விளக்கம் அளித்தார்.

The post உணவு பாதுகாப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : National Agricultural Institute ,Chief Technical ,National Agricultural Company ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர் பற்றி அவதூறு: ஈரோடு மாநகர்...