×

ரூ30.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்ட பணி ஆணை

 

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கம்மாளம்பூண்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லோகநாதன், பானுமதி, வட்டாட்சியர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு, 30 பயனாளிகளுக்கு தலா ரூ30.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகள், 30க்கும் மேற்பட்டோருக்கு கலைஞரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, அரசு துறை ரீதியாக அரங்குகள் அமைத்து அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார், திமுக நிர்வாகிகள் ஆதி, அப்புசுந்தர், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட
னர்.

The post ரூ30.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்ட பணி ஆணை appeared first on Dinakaran.

Tags : Artist's Dream House ,Uthramerur ,Chief Minister ,Kammalamboondi ,Union Committee ,President ,Hemalatha Gnanasekaran ,District Development Officers ,Loganathan ,Panumathi ,District Commissioner ,Thenmozhi ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடிசை...