×

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகள், கடையின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். உத்திரமேரூர் அருகே தீட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (65). இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், சரஸ்வதியிடம் தெரிவித்துள்ளனர். இதனால், உடனடியாக சரஸ்வதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ12 ஆயிரம் ரொக்க பணம் திருடுபோய் இருந்தது.

அதேபோல், அதே கிராமத்தில் மாவு மில் நடத்தி வரும் தங்கமணி என்பவரது, மாவு மில்லின் தகர கதவை உடைத்து, உள்ளே இருந்த ரூ700 பணத்தினையும், அருகில் பூட்டிக்கிடந்த சசிகலா என்பவரது வீடு உடைக்கப்பட்டு பொருட்கள் ஏதும் திருடு போகாமல் இருப்பதாக கூறி உத்திரமேரூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில், வழக்குப்பதிவு செய்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செ்யது, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Uttara Merur ,Saraswati ,Ditalam ,Uttaramerur ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய...