×

பள்ளிப்பட்டு அருகே குடிபோதையில் வாலிபர்கள் மோதல்: 8 பேர் கைது


பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அருகே குடிபோதையில் வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை தபால் நிலையம் அருகில் மரத்தடியில் பொதட்டூர்பேட்டை மற்றும் வாணிவிலாசபுரம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆட்டுக்குட்டியின் மீது பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கிருந்த இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பொதட்டூர்பேட்டை மடம் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகன் கோபி (23), வாணிவிலாசபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அருண் (23), வேலாயுதம் என்பவரின் மகன் அப்பு (23) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும், மோதல் சம்பவம் தொடர்பாக கோபி என்பவரது புகாரின் பேரில் அருண், அப்பு, ஆகாஷ், சாமியப்பன், பிரகாஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆகாஷ் கைது செய்யப்பட்டார். இதில் சாமியப்பன், பிரகாஷ் ஆகியோர் தப்பியோடி விட்டனர். இதேபோல் அருண் ெகாடுத்த புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த கோபி, தேவராஜ், நரேந்திரகுமார், பவன், மோகன், நேதாஜி, வினோத் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post பள்ளிப்பட்டு அருகே குடிபோதையில் வாலிபர்கள் மோதல்: 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Pallipattu ,Pothatturpet ,Vanivilasapuram Colony ,Dinakaran ,
× RELATED டிராக்டர் மோதி கல்லூரி மாணவன் பலி