- உடன் முதல்வர் திட்ட முகாம்
- சரவம்பாக்கம் ஊராட்சி
- சுந்தர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தகம்
- முதலமைச்சர் திட்ட முகாம்
- மதுராந்தகம் ஒன்றியம்
- ஆர்டிஓ
- தியாகராஜன்
- தி.மு.க.
- சிவகுமாரின்
- மாவட்ட கவுன்சிலர்
- இராசராமகிருஷ்ணன்
- பஞ்சாயத்து
- சபை
- மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
- சுந்தர் எம்.எல்.ஏ
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ தியாகராஜன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மாவட்ட கவுன்சிலர் ராஜாராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்ச்சியில், அவைத்தலைவர் சசிகுமார், கவுன்சிலர் பிரியா சக்கரபாணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோமதி வேலு, பாஸ்கர், சுகன்யா ஏக் நாத், குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு இறுதியாக ஒன்றிய துணை செயலாளர் சக்கரபாணி நன்றி கூறினார்.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வேடந்தாங்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் தலைமை தாங்கினார். தாசில்தார் துரைராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம், ஒன்றிய செயலாளர் தம்பு, மாவட்ட கவுன்சிலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சாமிநாதன் வரவேற்றார். உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், மக்களுடன் முதல்வர் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதேபோல், மதுராந்தகம் ஒன்றியம் சிலாவட்டம் ஊராட்சியில் ஆர்டிஓ தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில், சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பானுமதி பாலு, குமார், சிகாமணி, துணை தலைவர் நிர்மலா ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரசு உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள், அரசு ஊழியர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post சரவம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.