- முன்னார், கேரளா
- உடுமலை, தமிழ்நாடு
- இடுக்கி
- கேரளா
- மூணாறு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உடுமலை
- கொச்சி
- பிறகு நான்
- முன்னார்...
இடுக்கி: கேரளா மூணாரில் இருந்து தமிழ்நாட்டின் உடுமலை செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாறுவில் இருந்து கொச்சி மற்றும் தேனி செல்லும் சாலைகளும் நிலச்சரிவால் சேதமடைந்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மூணாறு பாம்பாறு லக்கம் நீர்வீழ்ச்சியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மூணாறில் இருந்து உடுமலை செல்லும் பாதை மற்றும் கொச்சி, தேனி செல்லும் சாலைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த சாலையில் முழுதுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமல்லாது அப்பகுதிக்கு சுற்றுலா சென்றவர்களின் வாகனங்களும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தின் மீட்பு படையினர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்று சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கேரளா மூணாரில் இருந்து தமிழ்நாட்டின் உடுமலை செல்லும் சாலையில் நிலச்சரிவு appeared first on Dinakaran.