திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை நீடித்து வருகிறது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் வயநாடு, திருச்சூர், கன்னூர் உட்பட 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போல கடல் பகுதிகளிலும் கடலலைகள் ஆக்ரோசஷமாக எழும் எனவும் தொடர்சியாக மழை நீடிக்கும் போது 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கேரளாவை பொறுத்தவையில் அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் செல்ல ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெல்லியாம்பதி, அட்டப்பாடி, திருவனந்தபுரம், பொன்முடி, திருச்சூர், வனப்பகுதிகளை சார்ந்த சுற்றுலாத் தளங்கள், நீர் நிலைகளை சார்ந்த சுற்றுலாத் தளங்கள், கடலோர சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் கனமழை எதிரொலி: வனப்பகுதி, நீர் நிலைகளை சார்ந்த சுற்றுலாத் தலங்கள் மூடல் appeared first on Dinakaran.