கேரளா: வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிக்காக கோவை சூலூரிலிருந்து ஹெலிகாப்டர் வந்தபோதும் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. வயநாட்டில் தரையிறங்க முடியாததால் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டர்கள் திரும்பிச் சென்றது. வயநாடு மற்றும் சுற்று வட்டாரத்தில் நிலவும் மோசமான வானிலையால் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சூலூரில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் உள்பட 3 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணிக்காக வந்துள்ளன.
The post வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணிக்காக வந்த ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் சிக்கல் appeared first on Dinakaran.