×

முழுநீள காமெடி படம் தெய்வ மச்சான்: விமல் தகவல்

சென்னை: உதய் புரொடக்‌ஷன்ஸ், மேஜிக் டச் பிக்சர்ஸ் சார்பில் உதயகுமார், கீதா, எம்.பி.வீரமணி தயாரித்துள்ள படம், ‘தெய்வ மச்சான்’. மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், பாண்டியராஜன் ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி நடித்துள்ளனர். கேமில் ஜெ.அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு காட்வின் ஜெ.கோடன் இசை அமைத்துள்ளார். அஜீஸ் பின்னணி இசை அமைத்திருக்கிறார். படம் குறித்து விமல் கூறியதாவது: கடந்த 1997-98களில் நான் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினேன்.

அப்போது பாண்டியராஜன் ஒரு வாகனத்தில் அமர்ந்து சாப்பிட்டதை பார்த்தேன். அன்றைய நிலையில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிய நடிகரான அவரைப்போல் நானும் ஒருநாள் வாகனத்தில் செல்லும்போதே சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். கடவுள் அருளால் நானும் நடிகராகி, பிறகு வாகனத்தில் பயணிக்கும்போது சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. முழுநீள காமெடி படமான ‘தெய்வ மச்சான்’ படத்தில் எனது தங்கையாக அனிதா சம்பத் நடித்துள்ளார். தீபா சங்கரும், கிச்சா ரவியும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

வில்லனாக ஆடுகளம் நரேன், எனது நண்பனாக பாலசரவணன் நடித்துள்ளனர். ‘பூகம்பம்’ என்ற குறும்படத்தை காண்பித்தனர். அது காமெடியாக இருந்தது. இதை முழுநீள திரைப்படமாக உருவாக்க என்னென்ன செய்வீர்கள் என்று கேட்டவுடன், இயக்குனர் சில கருத்துகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். அது சிறப்பாக இருந்தது. வேல.ராமமூர்த்தி குதிரை மீது அமர்ந்து வேட்டைக்காரராக தோன்றி, என் கனவில் சொல்வது எல்லாம் நடக்கும். ஆனால், அவர் என் கனவில் தோன்றி சொன்னவை எல்லாம் நடந்ததா, இல்லையா என்பது கதை.

The post முழுநீள காமெடி படம் தெய்வ மச்சான்: விமல் தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Udayakumar ,Geetha ,MP Veeramani ,Uday Productions ,Magic Touch Pictures ,Martin Nirmal Kumar ,Vimal ,Pandiyarajan Adukalam Naren ,Balasaravanan ,Anitha Sampath ,Vatsan Veeramani ,Deepa Shankar ,Kicha… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED செங்கல்பட்டு அருகே அதிமுக முன்னாள்...