×

‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் சைபர் கிரைம் போலீசாரால் கைது

சென்னை: ‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் நேற்று முன்தினம் தனது யூடியூப் சேனலில் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும்போதே துணியால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனை கண்ட அவரது நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு தற்கொலை முயற்சியில் இருந்து தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தையடுத்து யூடியூப் நேரலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அபிஷேக் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என பேசப்பட்டது.

இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பரங்கிமலை சைபர் கிரைம் போலீசாரால் பிரியாணி மேன் என அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ‘பிரியாணி மேன்’ என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் சைபர் கிரைம் போலீசாரால் கைது appeared first on Dinakaran.

Tags : Abhishek ,Biryani Man ,Cybercrime Police ,Chennai ,Chennai Cyber Crime Police ,Biryani Man… ,crime ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக...