- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- பிரதீப் குமார்
- திருச்சி
- த்ரிகொம்பு
- ஜியாபுரம்
- மாவட்ட கலெக்டர்
- முகோம்போ கவிரி நதி
- திருச்சி மாவட்டம்
- மகாராஷ்டிரா
- வடக்கு கர்நாடகா
- காவிரி
- கலெக்டர்
- ட்ரொம்பு பைலானா
ஜீயபுரம், ஜூலை 30: திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க ஆயத்தமாக உள்ள 41 கதவணைகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று ஆய்வு செய்தார். மகாராஷ்டிராவில் கனமழை பொழிவதால் வட கர்நாடகா மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வௌ;ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர், ஹேரங்கி அணைகள் முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடி வீதம் கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு ஜூன் மாதம் தரவேண்டிய நதிநீர் பங்கீட்டை தற்போது வழங்கியுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைந்தது. இதனால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. தமிழகத்தில் காவிரி கரையோர மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரையில் காவிரியில் தண்ணீர் வருமா என டெல்டா விவசாயிகளுடன் பொதுமக்களும் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டும், குடிநீர் மற்றும் டெல்டா பாசனத்திற்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது நேற்று 29ம்தேp இரவு மாயனூர் வந்தடையும் என்றும் இன்று காலை முக்கொம்பு வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உபரி நீர் வரத்தையொட்டி காவிரி கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட மக்களுக்கு வௌ;ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முக்கொம்பு காவிரி ஆற்றிலுள்ள 41 கதவணைகள் ரூ.16 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு பணி முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து பாசன நீர் திறப்பிற்கு அணை தயார் நிலையில் உள்ளதை உறுதிபடுத்தும் விதமாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள காப்பணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வளத்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் நித்தியானந்தம், உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் ராஜா, ரங்கம் ஆர்.டி.ஓ தட்சினாமூர்த்தி, தாசில்தார் தமிழ்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரியில் நீர்வரத்தை பொறுத்து அணை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து வரும் தண்ணீர் நாளை (30ம் தேதி) முக்கொம்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர் வரத்து மற்றும் பாதுகாப்பு கருதி காவிரி கதவணையில் தண்ணீர் திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என்றனர்.
The post காவிரியில் தண்ணீர் திறக்க ஆயத்த பணி; திருச்சி அடுத்த முக்கொம்பு மேலணையில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு appeared first on Dinakaran.