×

கலெக்டர் அலுவலகத்தில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர், ஜூலை 30: கரூர் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது. கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட் எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கரூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை (31ம் தேதி) மாலை 3 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலெக்டர் அலுவலகத்தில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur District ,Collector ,Thangavel ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதிகளில்...