- வேதாரண்யம்
- கொட்டிமுத்து மாரியம்மன் கோவில்
- கொடிமுத்து மாரியம்மன் கோவில்
- செடில்
- நாகப்பட்டினம்
- Kodiyakarai
- கொடிமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா
- கோடியக்கரை கொடிமுத்து மாரியம்மன் கோவில்
- திருவிழா
வேதாரண்யம், ஜூலை 30: வேதாரண்யம் அடுத்த கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பிரசித்தி பெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா காப்பு கட்டுதலுடன் கடந்த 19ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோயிலை சுற்றி வீதியுலா வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று செடில் உற்சவம் நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் செடில் ஏற்றப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. பின்னர் அம்மன் வீதியுலா நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
The post வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் உற்சவம் appeared first on Dinakaran.