×

பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பொன்னமராவதி, ஜூலை 30: பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொன்னமராவதியில் பொன்.புதுபட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பணியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு தலைவர் முடியரசன் தலைமை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி புதிய தலைவர் சுகதேவன், செயலாளர் சுதாகரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகளை பணியில் அமர்த்தி பேசினார். துணை ஆளுநர் லெட்சுமணன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் முத்தமிழ்பாசறை, லயன்ஸ் சங்கங்கள் நிர்வாகிகள், வர்த்தகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

The post பொன்னமராவதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா appeared first on Dinakaran.

Tags : Ponnamaravathi welfare aid distribution ceremony ,Ponnamaravati ,Pon Pudhupatti Rotary Society ,assistance ,President ,Mundiarasan ,Ramachandran ,Ponnamaravati welfare assistance ceremony ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஒன்றியத்தில் 42...