×

அயோத்தி நில மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: சமாஜ்வாடி வலியுறுத்தல்

புதுடெல்லி: அயோத்தியில் நடந்த நில மோசடிகள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என மக்களவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பைசாபாத் மக்களவை உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பேசினார். அப்போது, “அரசியல், வியாபாரத்துக்கு அயோத்தி பெயரை பாஜ பயன்படுத்தி வருகிறது. 2024-25 நிதிநிலை அறிக்கையில் அயோத்தி, உத்தரபிரதேசம் பற்ற எதையும் அமைச்சர் சொல்லவில்லை. ராமர் கோயில் கட்டும்போது அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில மோசடிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தி, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் அயோத்தியும், அயோத்தி மக்களும் எப்படி அழிக்கப்பட்டனர் என்ற உண்மை தெரிய வரும். 2027ம் ஆண்டில் உத்தரபிரதேசத்திலும், 2029ல் நாடு முழுவதும் பாஜ தோற்கடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post அயோத்தி நில மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: சமாஜ்வாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Samajwadi ,New Delhi ,Faizabad Lok Sabha ,Avdesh Prasad ,Samajwadi Party ,Lok Sabha ,
× RELATED அயோத்தி ராமர் கோயில் பெண் ஊழியர் பலாத்காரம்: 9 பேர் கும்பல் அட்டூழியம்