×

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, ஜூலை 30: சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் முத்துக்கருப்பன், ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தலைவர் மணியம்மா, மாவட்டச்செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வரும் 2025-26 நிதிநிலை அறிக்கையில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், சிவகங்கை ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பணி அடையாள அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Panchayat Union ,All India Agricultural Workers Union ,Union President ,Thanasekaran ,Union ,Muthukaruppan ,Agricultural Workers Union Demonstration ,Dinakaran ,
× RELATED நாளை ரேசன் குறைதீர் கூட்டம்