ராமநாதபுரம், ஜூலை 30: ராமநாதபுரத்தில் யூனியன் அலுவலகம் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ராமநாதபுரம் யூனியன் அலுவலகத்திற்கு ரூ.362 லட்சங்கள் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து ராமநாதபுரம் புதிய யூனியன் அலுவலகம் கட்டிடம் திறப்பு விழாவில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையிலும், திட்ட இயக்குனர் வீர் பிராப் சிங், யூனியன் சேர்மன் பிரபாகரன் முன்னிலையிலும் எம்.எல்.ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கரு மாணிக்கம் ஆகியோர் குத்து விளக்கேற்றியும், கல்வெட்டினை திறந்து வைத்தும் அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பிறகு அலுவலக வளாகம், அறைகள் பார்வையிட்டனர். பி.டி.ஓக்கள் செந்தாமரைச்செல்வி, முருகானந்தவள்ளி வரவேற்றனர். நிகழ்ச்சியில் துணை சேர்மன் ராஜவேணி பார்த்தசாரதி, நகராட்சி சேர்மன் கார்மேகம், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜகுமார், கரிகாலன், உலகராணி ராஜேந்திரன், சீனிஇபுராகீம் அம்மாள், முனீஸ்வரி சந்தவழியான், மாணிக்கசாரதி குப்புராமன், மனோகரன், கல்பனாதேவி கார்த்திகை பாண்டி, அசோக்குமார், பூமிநாதன் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் ஈஸ்வரி கருப்பையா, கார்த்தீஸ்வரி கொத்தலிங்கம், உதவி பொறியாளர்கள் அருண்பிரசாத், பாண்டிமுருகன், ராமநாதபுரம் ஒன்றியத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், யூனியன் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ராமநாதபுரத்தில் யூனியன் அலுவலக கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.