ஈரோடு, ஜூலை 30: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்ம் எண்-1ல் கடந்த 25ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதைப்பார்த்த சக பயணிகள் முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் காசிநாதன் (68) என்பது மட்டும் தெரியவந்தது.
ஆனால், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்துபோன காசிநாதன் சிமெண்ட்-சிவப்பு வெள்ளை கலர் கோடு போட்ட அரை கை சட்டை, கிரே கலர் பேண்ட்டும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், வலது கையில் குணவதி என்றும் பச்சை குத்தியுள்ளார். இறந்தவர் குறித்து தகவல் தெரிந்தால் ஈரோடு ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு 0424-2255177, 94981 01965 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி விழுந்த முதியவர் சாவு appeared first on Dinakaran.