புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில் சிறப்பு லோக் அதாலத் நேற்று தொடங்கியது. வரும் 3ம் தேதி வரை சிறப்பு லோக் அதாலத் நடைபெறுகிறது. நேற்று காலை உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் தொடக்கத்தின் போது தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில்,‘‘ இன்று(நேற்று) முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை உச்சநீதிமன்றத்தின் முதல் 7 பெஞ்ச்கள் சிறப்பு லோக் அதாலத்தில் சுமூக தீர்வு காண பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரிக்கும். சிறப்பு லோக் அதாலத் மதியம் 2 மணிக்கு துவங்கும். எனவே நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமாகவும், விரைவாகவும் தீர்க்க சிறப்பு லோக் அதாலத்தில் மக்கள் பங்கேற்க வேண்டும்’’ என்றார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அவரது வீடியோ செய்திபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
The post உச்சநீதிமன்றத்தில் சிறப்பு லோக் அதாலத் appeared first on Dinakaran.