×

1,10,217 மாணவ மாணவிகளுக்கு சீருடைகள்

தஞ்சாவூர், ஜூலை 30: பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகளை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி நீலகிரி முனிசிபல் காலனி மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு மிதியண்டி, சீருடை, விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி. 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ மாணவர்களுக்கு சீருடை, விலையில்லா மிதிவண்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்ததாவது.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா முதல் ஒரு இணை சீருடைகள், 2024-2025 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி நேற்று வழங்கப்பட்டது.

அரசு மற்றும் நிதிஉதவி பெறும் தொடக்க, நடு நிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் 28,366 மாணவர்கள், 28,905 மாணவிகள், 6 முதல் 8 வகுப்பு பயிலும் 26,509 மாணவர்கள், 26,437 மாணவிகள் என மொத்தம் 1 முதல் 8 வகுப்பு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிலும் 1,10, 217 மாணவ மாணவிகளுக்கு ஒரு இணை சீருடைகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2024-2025 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 7,686 மாணவர்களுக்கும் தலா ரூ.4,900 மதிப்பீட்டில் 3,76,61,400 மதிப்பீட்டில் மிதிவண்டிகளும், 10,148 மாணவிகளுக்கு தலா ரூ.4,760 ரூ.4,83,04,480 மதிப்பீட்டில் மிதிவண்டிகள் என ஆக மொத்தம் 142 அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளிகளில் பயிலும் 17,834 மாணவிகளுக்கு ரூ.8,59,65,880 மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 525 பள்ளிகளில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் 1335 ஆசிரியர்களுக்கு ரூ. 1,69,94,550 மதிப்பீட்டிலும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 622 பள்ளிகளில், 1 முதல் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் 1480 ஆசிரியர்களுக்கு ரூ. 1,88,40,400 மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் மாவட்ட அளவில் 1,147 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் 1 முதல் 5 வகுப்புகளுக்கு கற்பிக்கும் 2,815 ஆசிரியர்களுக்கு ரூ.12.730 மதிப்பிலான ரூ.3,58,34,950 மதிப்பீட்டில் கையடக்கக் கணினி (TABLET) வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு) டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உலஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.
அரசு மற்றும் நிதிஉதவி பெறும் தொடக்க, நடு நிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு பயிலும் 28,366 மாணவர்கள், 28,905 மாணவிகள், 6 முதல் 8 வகுப்பு பயிலும் 26,509 மாணவர்கள், 26,437 மாணவிகள் என மொத்தம் 1 முதல் 8 வகுப்பு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பயிலும் 1,10, 217 மாணவ மாணவிகளுக்கு ஒரு இணை சீருடைகள் வழங்கப்பட்டது.

The post 1,10,217 மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Minister ,Mahesh Poiyamozhi ,Thanjavur District Thanjavur Municipal Corporation ,Nilgiris Municipal Colony Municipal Corporation High School ,District Governor ,Priyanka ,
× RELATED மகாவிஷ்ணு விவகாரத்தையடுத்து பள்ளி...