×

புலிகள் தினத்தை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் 29 புலிகள் தத்தெடுப்பு

சென்னை: சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. இந்நிலையில் இன்னர் வீல் கிளப் பீனிக்ஸ் சங்கம் சார்பில் விலங்குகள் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே ஒருநாளில் மட்டும் 29 புலிகள் தத்தெடுக்கப்பட்டன. இதற்கான காசோலையை, பூங்காவின் துணை இயக்குநர் திலீப்குமாரிடம், இன்னர்வீல் கிளப் பீனிக்ஸ் சங்கத்தினர் வழங்கினர். புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. ஓட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் உள்ள புலிகளின் அடைப்பிடத்திற்கு சென்று பார்வையிட்டனர் என்றும் உயிரியல் பூங்கா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post புலிகள் தினத்தை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் 29 புலிகள் தத்தெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur Park ,Tiger Day ,Chennai ,Vandalur Arinagar Anna ,Zoo ,Inner Wheel Club Phoenix Sangam ,
× RELATED வண்டலூர் பூங்காவில் நீர் யானை குட்டி ஈன்றது