- சென்னை
- அண்ணா பல்கலைக்கழகம்
- ஆதார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கவர்னர்
- RN
- ரவி
- அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்
- தின மலர்
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர், பல கல்லூரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முறைகேட்டில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? என விவாதிக்கப்பட்டது. இதற்கிடையில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது கருணை காட்டக் கூடாது: ஆளுநர் திட்டவட்டம் appeared first on Dinakaran.