×

முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலை உணவு திட்டம் நடைபெறும் மையங்களை அனைத்து அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு திட்ட செயல்பாடுகளின் குறிப்பிட்ட நேரத்திற்குள் அதற்குரிய செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும், உணவு அருந்துவதற்கான நேரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், காலை உணவு திட்டத்திற்கு வழங்கப்படும் பொருட்களை பிரதி மாதம் 28ம் தேதிக்குள் காலை உணவு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இதில் மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரகாஷ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் காலை உணவு திட்ட பணிகள் குறித்து கண்காணிப்பு குழு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Thiruvallur District Collector ,District Collector ,T. Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூரில் ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு..!!