×

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெரிய நத்தம் கிராமத்தில் துலுக்காணத்தம்மன் கோயிலில் 10ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தம் ஊராட்சியில் துலுக்காணத்தம்மன் கோயில் உள்ளது. இங்கு 10ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த நிகழ்வை ஒட்டி வெள்ளிக்கிழமை தீமிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சனிக்கிழமை கணபதி ஹோமம், நவச்சண்டியாக பூஜையும் தொடர்ந்து, கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை நவச்சண்டியாக பூஜை, கலச அபிஷேகம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், காப்பு கட்டிய பக்தர்கள் 150 பேர் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் ஒவ்வொருவராக தீக்குழியில் இறங்கினர். இந்த தீமிதி திருவிழாவை காண 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, துலுக்காணத்தம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த தீமிதியும் வானவேடிக்கையும் பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். பெரிய நத்தம் ஊராட்சி பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர். தீமிதி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதை தொடர்ந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆரம்பாக்கம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கும்மிடிப்பூண்டி அருகே உள்ள துலுக்காணத்தம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Dimithi festival ,Tulukannathamman temple ,Kummidipoondi ,annual ,Periya Natham village ,Periya Natham Panchayat ,Theemithi festival ,
× RELATED மோகனூர் அருகே கோயிலில் தீமிதி விழா கோலாகலம்