×

காஸ் கசிவால் தீவிபத்து: வாலிபர் காயம்

பெரம்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் (30), அயனாவரம் மதுரை தெருவில் வாடகை வீட்டில் தங்கி, ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சமைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது, திடீரென ஸ்டவ் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அதில், சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

The post காஸ் கசிவால் தீவிபத்து: வாலிபர் காயம் appeared first on Dinakaran.

Tags : Gas leak outbreak ,Perampur ,Suresh ,Rajasthan ,Ayanavaram Madurai Street ,Gaz ,Kas Kashiwal ,
× RELATED விளை நிலங்களை சேதப்படுத்தி வரும்...