×

திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு நாள்

திருவள்ளூர்: திருநின்றவூர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நன்னெறிக் கழகம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுக் குழு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஜெயா கல்வி குடும்பங்களின் தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் ஆலோசனையின் பேரில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு நாள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழாவை நடத்தியது. கல்லூரி முதல்வர் ப.குகன் தலைமை தாங்கினார். டீன் ஜெயஸ்ரீ, துணை முதல்வர் வி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அப்துல் கலாம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்கள் சீ.வினோத் குமார், த.வே.எழிலா சுப்ரமணி, ர.டேனியல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்வியின் சிறப்பு குறித்தும், கல்லூரி வாழ்க்கையின் மகத்துவம் குறித்தும் பேசினர். பெண்கள் மேம்பாட்டுக் குழு உறுப்பினர் செ.சுதா தொகுப்புரை ஆற்றினார். முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கோ.சரஸ்வதி நன்றி கூறினார்.

The post திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு நாள் appeared first on Dinakaran.

Tags : Abdul Kalam Memorial Day ,Tiruninnavur ,Jaya Arts and Science College ,Thiruvallur ,Jaya College of Arts and Science ,Tamil Thura Nannerik Kazhagam and ,Women's Development Committee ,Youth Red Cross Society ,Jaya Education Families ,A. Kanagaraj ,President ,Abdul Kalam ,
× RELATED திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு நாள்