காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எஸ்விஎன் பிள்ளை தெரு, குறுக்கு வீதி பகுதியில் மாநகராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற சாந்தி துரைராஜ் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக நேற்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், மேயர் எதிர்ப்பு சுயேட்சை கவுன்சிலரான சாந்தி துரைராஜ் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தார்.
இந்நிலையில், வார்டிற்கு திரும்பி வந்த சாந்தி துரைராஜ், சிமென்ட் சாலை பணிகள் தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சிலருடன் சேர்ந்து கையில் பெட்ரோல் பாட்டிலை வைத்துக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் மற்றும் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி துரைராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டு, தரமான சாலை அமைக்கப்படும் என போலீசார் உறுதியளித்தார். இதனையடுத்து, மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி துரைராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post பெட்ரோல் பாட்டிலுடன் சுயேட்சை பெண் கவுன்சிலர் சாலை மறியல் appeared first on Dinakaran.