×

3 ஆண்டு லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு செல்போன், பணத்துடன் துபாய்க்கு தப்பிய வாலிபர் மும்பையில் கைது: திருப்போரூர் போலீசார் நடவடிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரம்யா (24). தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், சட்டஞ்சால் பகுதியைச் சேர்ந்த தன்சீம் குவாலாப் (33) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் கணவன், மனைவி போல் லிவிங் டூ கெதர் முறையில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதன் காரணமாக ரம்யா 3 முறை கர்ப்பம் அடைந்தார். ஆனால், 3 முறையும் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி தன்சீம் வற்புறுத்தியதால் ரம்யா கலைத்து விட்டார். பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 4வது கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் கடந்து தன்சீமிடம் ரம்யா தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த தன்சீம் வீட்டில் இருந்த ஐபோன், 3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக ரம்யா கடந்த 2021ம் ஆண்டு கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். அவர் துபாய்க்கு தப்பிச் சென்று அங்கு வேலை செய்து வருவது தெரியவந்தது. இந்நிலையில், அனைத்து விமான நிலையங்களுக்கும் தன்சீம் குவாலாப் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த 27ம் தேதி துபாயில் இருந்து மும்பை வழியாக கேரளா வர தன்சீம் டிக்கட் புக்கிங் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் தன்சீம் குவாலாப்பை அம்மாநில போலீசார் மடக்கிப்பிடித்து சென்னைக்கு தகவல் அளித்தனர்.  அதன்பேரில், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், கேளம்பாக்கம் போலீசார் மும்பை சென்று தன்சீம் குவாலாப்பை கைது செய்து அழைத்து வந்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post 3 ஆண்டு லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு செல்போன், பணத்துடன் துபாய்க்கு தப்பிய வாலிபர் மும்பையில் கைது: திருப்போரூர் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Dubai ,Mumbai ,Tiruporur ,Tirupporur ,Ramya ,Puducherry ,Kelambakkam ,Tanseem Gwalab ,Chattanjal, Kasargod district, Kerala ,
× RELATED மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் கட்சி தனித்து போட்டி?