×

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: டிராவிட் விருப்பம்


‘உங்களுக்கு விளையாட்டு பிடிக்கும் என்றால் நீங்கள் ஒலிம்பிக் போட்டியுடன்தான் வளர்வீர்கள். எப்போதும் ஒலிம்பிக்கில் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இருந்தால் அற்புதமாக இருக்கும். மும்பையில் நடந்த ஒலிம்பிக் சர்வதேச குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. எனவே, அடுத்து ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்போது கிரிக்கெட்டும் இடம்பெறக் கூடும். சமீபத்தில் அங்கு நடந்த டி20 உலக கோப்பை போட்டியைக் காண அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் வந்திருந்தனர்’ என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

The post ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: டிராவிட் விருப்பம் appeared first on Dinakaran.

Tags : Olympics ,Dravid ,Mumbai ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்ஸ்: சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு