×

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வெள்ளி வென்றார் கிடாம்பி

ஹுவல்வா: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் லோ கீன் யூவுடன் நேற்று மோதிய கிடாம்பி 15-21, 20-22 என்ற நேர் செட்களில் போராடி தோற்று 2வது இடம் பிடித்தார். உலக சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமை லோ கீன் யூவுக்கு கிடைத்துள்ளது. அரையிறுதியில் தோற்ற இந்தியாவின் லக்‌ஷியா சென் மற்றும் ஆன்டன்சென் (டென்மார்க்) இருவரும் வெண்கலப் பதக்கம் பெற்றனர். உலக பேட்மின்டனில் பிரகாஷ் படுகோன் (1983), சாய் பிரனீத் (2019), லக்‌ஷியா சென் (2021) வெண்கலம் வென்றுள்ள நிலையில், வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை கிடாம்பி வசமாகியுள்ளது….

The post உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வெள்ளி வென்றார் கிடாம்பி appeared first on Dinakaran.

Tags : Kitambai ,World Badminton Championship ,Huvalwa ,India ,Kitambi Srikanth ,World Badminton Championship Series ,Kitamby ,Dinakaran ,
× RELATED உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறி அசத்தினார் மரின்