×

போடி பகுதியில் அறுவடை செய்த கத்தரிக்காயை சந்தைக்கு அனுப்பும் பணி தீவிரம்

போடி : போடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட கத்தரிக்காய்களை தரம் பிரித்து சந்தைக்கு அனுப்பும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
போடி பகுதியில் குறுகிய கால பயிரான கத்தரிக்காய் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேவேளையில் சந்தையில் கத்தரிக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

போடி மேற்கு மலைத்தொடர்ச்சியில் உள்ள குரங்கணி முட்டம் பகுதியில் சாம்பலாற்று மெகா தடுப்பணையில் இருந்து மறுகால் பாய்ந்து வரும் கொட்டகுடி ஆற்று நீரானது கண்மாய்கள், குளங்களில் தேக்கப்படுகிறது. மேலும் வருடத்தில் 4 மாதங்கள் கிடைக்கும் 18ம் கால்வாய் பாசன நீரும் இந்தப் பகுதியில் பாசனத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

ஓரளவு மழையும் கிடைத்ததால் கத்தரிக்காய் விளைச்சல் நன்றாக உள்ளது.போடியை சுற்றியுள்ள அணைக்கரைப்பட்டி, மீனா விலக்கு, துரைராஜபுரம் காலனி, தோப்புப் பட்டி, சாலிமரத்துப்பட்டி, காமராஜபுரம், டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், விசுவாசபுரம், அம்மா பட்டி, சுந்தர்ராஜபுரம், பெருமாள் கவுண்டன்பட்டி, நாகலாபுரம், ராசிங்காபுரம்,
சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராணி மங்கம்மாள் சாலை கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிவடைந்து, கத்தரிக்காய்களை தரம் பிரித்து சந்தைகளுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post போடி பகுதியில் அறுவடை செய்த கத்தரிக்காயை சந்தைக்கு அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Dinakaran ,
× RELATED போடி பஸ் ஸ்டாண்டில் பூட்டிய கடைகளில் சிசிடிவி கேமராக்கள் திருட்டு