×
Saravana Stores

ஊட்டியில் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தாத்தா பாட்டிகள் தினம் கடைபிடிப்பு

ஊட்டி : ஊட்டியில் உள்ள பழமைவாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தாத்தா பாட்டிகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 4-வது ஞாயிற்றுக்கிழமை தாத்தா, பாட்டி தினமாக கொண்டாடப்படும் என்று கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். ஜூலை 26ம் தேதி ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளின் பெற்றோர் மற்றும் இயேசு கிறிஸ்துவின் தாத்தா, பாட்டிகளான புனித ஜோகிம் மற்றும் புனித அன்னாள் ஆகியோரின் பண்டிகை தினத்துடன் இணைந்து முதியோர்களின் தினமாக கத்தோலிக்க திருச்சபை அனுசரிக்க இதனை தேர்ந்தெடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக ஊட்டி வண்டிசோலையில் உள்ள பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் நேற்று முதியோர்கள் அதாவது தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.

மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். உடன் அருட்தந்தை ஞான தாஸ், பங்குத்தந்தை ரவி லாரன்ஸ், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆண்டனி இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இறுதியில் திருப்பலியில் பங்கேற்ற வயதானோருக்கு ஒரு சிறிய பரிசு, தேநீர், இனிப்புகள் வழங்கி வழங்கப்பட்டது. விருப்பமுள்ள குழந்தைகள் அவர்களுக்கு பரிசுகளை வழங்கலாம் என்று பங்கு தந்தையை அறிவித்ததன் பேரில் குழந்தைகள் அனைவரும் தாத்தா, பாட்டிகளுக்கு பரிசுகளை வழங்கி ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டனர்.

The post ஊட்டியில் பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் தாத்தா பாட்டிகள் தினம் கடைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : of ,Grandparents' Day ,Thiru Karada Andavar Church ,Ooty ,Grandparents Day ,Pope Francis ,
× RELATED பலாப்பழ பணியாரம்